தமிழக பாஜகவிற்கு அடுத்த தலைவரை நியமிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.இதுதொடர்பாக பேசிய முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் பாஜகவின் காலம் தொடங்கிவிட்டது.
அதற்கு உதாரணமாகத் தான் உள்ளாட்சி தேர்தலில் பாஜகவிற்கு தமிழக மக்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்துள்ளனர். உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டிருக்கலாம்.
அப்படி செய்திருந்தால் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருப்போம் என்று கூறினார். இதற்கு அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது
உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் தொடர்பாக பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்த கருத்துகளுக்கு ஆளுங்கட்சி பதிலடி கொடுத்து வருகிறது.