உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் தொடர்பாக பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்த கருத்துகளுக்கு ஆளுங்கட்சி பதிலடி கொடுத்து வருகிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக உள்ளாட்சி தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்றது. கடந்த தேர்தலை ஒப்பிடுகையில் அதிமுக பெரும் சரிவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் பாஜக குறிப்பிடத்தக்க இடங்களில் வெற்றி பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தாமரை மலரத் தொடங்கிவிட்டதாக மீம்ஸ் பறந்து கொண்டிருக்கின்றன. கடந்த சில மாதங்களாக தமிழக பாஜகவிற்கு தலைமை இல்லாத சூழலில் இந்த வெற்றி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.