வெங்காய விலை உயர்வை கண்டித்து, ராமேஸ்வரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெங்காய விலை உயர்வை கண்டிக்கும் விதமாக, இந்தியன் வங்கியில் வெங்காயத்தை அடகு வைக்க முயன்று நூதன போராட்டம் நடைபெற்றதால், ராமேஸ்வரத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பெரும் பரபரப்பு
நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வெங்காய விலையை கட்டுப்படுத்தவும், விலையேற்றத்தை மத்திய அரசு தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நூற்றுக்கணக்கனோர், கழுத்தில் வெங்காய மாலைகள் அணிந்து, ராமேஸ்வரத்தில் உள்ள இந்தியன் வங்கி கிளை அலுவலகத்துக்கு வெளியே இன்று நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.